டெங்கு நோய் தொற்றுக்கான மாற்று மருந்து கண்டுபிடிப்பு!
டெங்கு தொற்றுக்கான மாற்று மருந்தொன்றை அமெரிக்க நிறுவனமொன்று கண்டு பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியாக டெங்கு காய்ச்சலை ஒழிக்கும் வகையிலான மருந்தொன்று இல்லாத நிலையில், இந்த கண்டுபிடிப்பு குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்க மருத்துவ மற்றும் சுகாதார சங்கத்தின் வருடாந்த கூட்டத்தில் இந்த கண்டுபிடிப்பு தொடர்பான தரவுகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
டெங்கு நோய்த் தொற்று நீண்ட காலமாக ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்துள்ளது.
இந்த வைரஸ் தொற்றினால் மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான மரணங்களும் சம்பவித்துள்ளன.
அத்துடன், காலநிலை மாற்றம் காரணமாக டெங்கு வைரஸினை பரப்பும் நுளம்புகளுக்கு துரிதமாக செயல்படும் தன்மை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி ஜெரமி பஃரர் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
டெங்கு வைரஸ் தடுப்பூசிக்கான சவாலில் இருந்து உலகம் விடுபடுவதற்கான மாற்று மருந்து செயல்படும் பட்சத்தில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தை பெறும் மக்கள் பெரிதும் பயன் அடைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.