வயதானவர்கள் பட்டினி மற்றும் தீவிர வறுமையின் அபாயத்தை எதிர்நோக்குகின்றனர்

வயதானவர்கள் பட்டினி மற்றும் தீவிர வறுமையின் அபாயத்தை எதிர்நோக்குகின்றனர்

அதிகரித்து வரும் உலகளாவிய செலவுகள் காரணமாக வயதானவர்கள் பட்டினி மற்றும் தீவிர வறுமையின் அபாயத்தை எதிர்நோக்குவதாக புதிய உலகளாவிய அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

ஹெல்ப் ஏஜ் இன்டர்நெசனல் நிறுவனத்தின் அறிக்கை இதனை தெரிவித்துள்ளது.

உலகளாவிய உணவு, எரிபொருள் மற்றும் நிதி நெருக்கடி உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான முதியவர்கள் மீது பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

உலகளாவிய உணவு, எரிபொருள் மற்றும் நிதி நெருக்கடியின் தாக்கம் வயதானவர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை, அர்ஜென்டினா, கொலம்பியா, எத்தியோப்பியா, லெபனான், மலாவி, மொசாம்பிக், பிலிப்பைன்ஸ், தான்சானியா மற்றும் ஏமன்.
ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

உணவு மற்றும் எரிபொருள் செலவுகள் அதிகரித்து வரும் நிதி நிலைமைகள் உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கின்றன. ஆனால் ஏற்கனவே குறைந்த அல்லது வருமானம் இல்லாத வயதானவர்களுக்கு, நிலைமை இருண்டதாக உள்ளதாக ஹெல்ப் ஏஜ் கூறுகிறது.
 
வயதானவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சமைக்கக்கூடிய உணவின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதாக அறிக்கை காட்டுகிறது. 

இந்த விடயத்தில் வயதான ஆண்களை விட வயதான பெண்கள் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.

இதேவேளை இலங்கை கொலம்பியா, எத்தியோப்பியா, லெபனான், மொசாம்பிக், தான்சானியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளில், நெருக்கடியின் போது முதியவர்களின் மேலாண்மை திறன் எவ்வாறு பலவீனப்படுகின்றன என்பதையும் ஹெல்ப் ஏஜ் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.