துருக்கி விண்வெளி ஆய்வு மைய தலைமையகத்தில் தீவிரவாத தாக்குதல்!

துருக்கி அரசுக்கு சொந்தமான அங்காராவின் தலைநகரில் உள்ள துருக்கி விண்வெளி ஆய்வு மைய தலைமையக கட்டிடத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆயுதம் ஏந்திய இரண்டு பயங்கரவாதிகள் விண்வெளி ஆய்வு மையத்துக்குள் நுழைந்து கைக்குண்டுகளை வீசியதுடன் ஐந்து பேரை சுட்டுக் கொன்றதாகவும், இந்த தாக்குதலில் இருபத்தி இரண்டு பேர் காயமடைந்ததாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து அங்கு பாதுகாப்புப் படையினர்,பொலிஸார், தீயணைப்பு வாகனங்கள், அம்புலன்சுகள் விரைந்துள்ளன. இதனால் அப்பகுதி கலவர பகுதியாக காட்சி அளிக்கிறது. குர்தீஷ் அமைப்பினர் அல்லது ஐ.எஸ். பயங்கரவாதிகளாக இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.