வத்திக்கான் புறப்பட்டார் கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

வத்திக்கான் புறப்பட்டார் கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இன்று (23) காலை வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

ஏப்ரல் 26, சனிக்கிழமை நடைபெறும் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, கார்டினல் ரஞ்சித் காலை 9.30 மணிக்கு கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ், ஐந்து வாரங்களாக இரட்டை நிமோனியாவுடன் போராடி வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு மாதத்திற்குள், திங்கட்கிழமை (21) தனது 88வது வயதில் பக்கவாதத்தால் காலமானார்.

பெரும் கூட்டத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படும் அவரது இறுதிச் சடங்கு, சனிக்கிழமை (ஏப்ரல் 26) காலை 10.00 மணிக்கு வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு முன்னால் உள்ள சதுக்கத்தில் நடைபெறும்.