இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலுக்கு தயாரான ஈரான்! போர்க்கப்பல்களை நிலைநிறுத்திய அமெரிக்கா!

இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலுக்கு தயாரான ஈரான்! போர்க்கப்பல்களை நிலைநிறுத்திய அமெரிக்கா!

இஸ்ரேல் (Israel) மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈரான் (Iran) தயாராகி வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா (America) தனது இராணுவ மற்றும் போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி வருகின்றது.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) கொல்லப்பட்டதையடுத்து, இஸ்ரேல் மீது தாக்குதல் நடாத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.

இந்த வார இறுதியில் கடுமையான தாக்குதலுக்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க பணியாளர்களையும் இஸ்ரேலையும் பாதுகாக்கும் நோக்கத்தில் பென்டகன் (The Pentagon) இவ்வாறு போர்க் கப்பல்களை நிலைநிறுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதேவேளை, இந்த தருணத்தில் அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கப்பட வேண்டும் என இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தூதரகத்தின் X பக்கத்தில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.