கனடாவில் இந்துக்கோயில் மீது தாக்குதல்!

கனடாவில் இந்துக்கோயில் மீது தாக்குதல்!

கடந்த வாரம் கனடா - டொராண்டோ(Canada - Toronto) பகுதியில் உள்ள இந்து கோவிலில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, காலிஸ்தான் அமைப்பின் முதன்மை அமைப்பாளரான இந்தர்ஜீத் கோசல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிராம்ப்டன் பகுதியின் குடியிருக்கும் 35 வயதான கோசல், கைது செய்யப்பட்ட பின்னர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு பின்னர் நிபந்தனையின்கீழ் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் அவரை, பிராம்ப்டனில் உள்ள ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பீல் பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிஸ்தான் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள், தமது தாக்குதலின்போது, இந்து - கனேடிய பக்தர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தி கோர் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், பின்னர் வன்முறையாக மாறியிருந்தது.

இந்த மோதல் தொடர்பான காணொளி ஆதாரங்களை சேகரித்துள்ள பொலிஸார், சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக கூறப்பட்ட, கனடாவின் பொலிஸ் அதிகாரியாக செயற்படும் சீக்கியர் ஒருவரும் அண்மையில் கைது செய்யப்பட்மை  குறிப்பிடத்தக்கது.  தி கோர் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், பின்னர் வன்முறையாக மாறியிருந்தது.

இந்த மோதல் தொடர்பான காணொளி ஆதாரங்களை சேகரித்துள்ள பொலிஸார், சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக கூறப்பட்ட, கனடாவின் பொலிஸ் அதிகாரியாக செயற்படும் சீக்கியர் ஒருவரும் அண்மையில் கைது செய்யப்பட்மை  குறிப்பிடத்தக்கது.