14 ஆண்டுகளில் பூமியை நெருங்கும் பாரிய கோள் -  72% பூமியில் மோதும் சாத்தியம்!

14 ஆண்டுகளில் பூமியை நெருங்கும் பாரிய கோள் -  72% பூமியில் மோதும் சாத்தியம்!

எதிர்வரும் 14 ஆண்டுகளில், அதாவது 2038 ஜூலை 12 அன்று, ஒரு பெரிய கோள் பூமியைத் தாக்கக்கூடும் என நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.

மேரிலாண்டில் உள்ள ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையுடன் இணைந்து பூமியை கோள்களில் இருந்து பாதுகாப்பது குறித்து இடம்பெற்ற விஷேட பட்டறையின் முடிவின் போதே நாசா நிறுவனம் இந்த தகவலை வௌியிட்டுள்ளது. 

இந்த பட்டறையில் வானியலாளர்கள், வானியற்பியல் வல்லுநர்கள் மற்றும் அமெரிக்க இராணுவத் துறைகளின் தலைவர்களும் பங்கேற்று கோள்கள் பற்றிய தங்களின் அறிவையும் தரவையும் பகிர்ந்து கொண்டனர்.

இதன்போது பூமி அருகில் அவ்வப்போது கடந்து செல்லும் கோள்கள் மற்றும் அவற்றின் பாதைகளை கணினி மூலம் ஆய்வு செய்ததில், பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பெரிய கோள் ஒன்று 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி பூமியை நோக்கி வரும் என்றும், அது பூமியில் மோதும் சாத்தியம் 72 % என்றும் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது .

இந்த கோள் பூமியை தாக்குவதாக இருந்தால் அதை அழிக்க அல்லது அதன் பாதையை மாற்றுவதற்கான திட்டங்களை வகுப்பதன் முக்கியத்துவத்தை பட்டறையில் இணைந்த அமெரிக்க ராணுவ தளபதிகள் சுட்டிக்காட்டியதாகவும் கூறப்படுகிறது.

நாசாவின் செய்தி தளத்திலிருந்து சுருக்கம் -

During the exercise, participants considered potential national and global responses to a hypothetical scenario in which a never-before-detected asteroid was identified that had, according to initial calculations, a 72% chance of hitting Earth in approximately 14 years. The preliminary observations described in the exercise, however, were not sufficient to precisely determine the asteroid’s size, composition, and long-term trajectory. To complicate this year’s hypothetical scenario, essential follow-up observations would have to be delayed for at least seven months – a critical loss of time – as the asteroid passed behind the Sun as seen from Earth’s vantage point in space.