பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
![பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!](https://tamilvisions.com/uploads/images/202502/image_870x_67ab0b66169c8.jpg)
பிரான்ஸ் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வேன்ஸ் ஆகியோரை சந்தித்தார்.
3 நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு பாரிஸ் விமான நிலையத்தில் வைத்து இந்திய மக்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .
இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோனைச் சந்தித்துக் கலந்துரையாடிய பிரதமர் மோடி, மேக்ரோன் வழங்கிய விருந்தில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.