மின்சார தடைக்கு குரங்கு காரணமா?
![மின்சார தடைக்கு குரங்கு காரணமா?](https://tamilvisions.com/uploads/images/202502/image_870x_67ab27de34168.jpg)
தேசிய மின்சார கட்டமைப்பை சமநிலையாக நடத்திச் செல்வது தொடர்பில் தெளிவின்றி கடந்த கால அரசாங்கங்கள் செயற்பட்டமையே மின்சார தடைக்கி காரணம் என மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.
பாணந்துறை உப மின் உற்பத்தி நிலைய கட்டமைப்பில் குரங்கு பாய்ந்தமையே இந்த மின்சார தடைக்கான காரணம் என மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த நிலையில்
பாணந்துறை மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் அதனை மறுத்துள்ளார்.
மின் பிறப்பாக்கி கட்டமைப்பில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரே இவ்வாறு இதனை நிராகரித்துள்ளார்.
''வழமையாக குரங்குகள் பாயும். குரங்குகள் பாயும் போது செயலிழந்து மீண்டும் வழமைக்கு திரும்பி விடும். ஆனால் குரங்கு பாயவில்லை.
அப்படியென்றால் குரங்கின் உடல் இருக்க வேண்டும் அல்லவா? குரங்கை காணவில்லை.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் மூன்று குரங்குகள் பாய்ந்தன. உடனே இறந்து விட்டன. அதைவிடுத்து, இந்த இடத்தில் பாயவில்லை.குரங்கு பாயும் நேரங்கள் இருக்கின்றன. எனினும், இன்று பாயவில்லை.'' என பாணந்துறை மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்
மின்சார தடையினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கவலையை தெரிவித்துக்கொள்கின்றோம்", என மின்சக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மின்சார தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.