அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவித்தல்
![அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவித்தல்](https://tamilvisions.com/uploads/images/202502/image_870x_67adba9436c52.jpg)
பெப்ரவரி மாதத்துக்கான “அஸ்வெசும” நலன்புரி கொடுப்பனவுகள் இன்று (13) பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, மொத்தம் 1,725,795 குடும்பங்கள் இம்மாதத்திற்கான கொடுப்பனவைப் பெற தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான உதவிக்காக 12 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை பயனர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.