சர்வதேச விருது விழாவில் தமிழ் பாடலுக்கு பெருமை

ஸ்ரீகாந்த் தேவா இசையில் கடந்த ஆண்டில் வெளியான “முட்டக்கண்ணி” ஆல்பம் பாடல், அமெரிக்காவில் அமைந்துள்ள சர்வதேச பாடலாசிரியர் சங்கம் (ISSA) வழங்கும் 2025ஆம் ஆண்டுக்கான விருதுக்கு இரு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு, உலகத் தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளது.
இப்பாடலை இலங்கையை சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார்.
"தப்பெல்லாம் தப்பே இல்லை" பாடலின் ஊடாக தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான பொத்துவில் அஸ்மின் "அய்யோ சாமி நீ எனக்கு வேணாம்" பாடலின் ஊடாக சர்வதேச கவனத்தை பெற்றார்.
இவரது எழுத்துப்பணிக்காகவே, “ஆண்டின் சிறந்த சர்வதேச பாடலாசிரியர் விருதுக்கு” அவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த பாடல் “சர்வதேச சிறந்த இசை வீடியோ” எனும் பிரிவிலும் பரிந்துரை பெற்றுள்ளது.
ஜெர்மனியில் வாழும் ஈழத்துப் பாடகர் முல்லை சசி பாடிய இந்தப் பாடலுக்கு, பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர்மாஸ்டர் நடனம் அமைத்துள்ளதோடு பாடல் காட்சியிலும் நடிகை காயத்ரிசானுடன் இணைந்து நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு 25 நாடுகளில் 250க்கும் மேற்பட்ட பிரபலங்களால் வெளியிடப்பட்ட இப்பாடல் YouTube, Instagram, Facebook, TikTok உள்ளிட்ட பல சமூக ஊடகங்களிலும் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.
இவ்வருட ISSA விருது விழா, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி, அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் அட்லாண்டா நகரில் உள்ள சாண்டி ஸ்பிரிங்ஸ் கலை மையத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்க்கது.
https://poll-maker.com/Q8AGK1JD3