தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி தொடர்பில் வெளியான தகவல்
கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்பட்ட பாடசாலை மாணவி , தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு தாமரைக் கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி, கொம்பனித் தெருவில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் சில மாதங்களுக்கு முன்னர் விழுந்து உயிரிழந்த மாணவி மற்றும் மாணவன் ஆகிய மூவரும் நண்பர்கள் என தெரியவந்துள்ளது.
அத்துடன், உயிரிழந்த மூவரும் ஒரே சர்வதேச பாடசாலையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கொம்பனித் தெருவில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பில், சர்வதேச பாடசாலை ஒன்றைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவி மற்றும், மாணவன் ஆகியோர் கீழே விழுந்து உயிரிழந்தனர்.
இந்த நிலையில், குறித்த மாணவர்களின் உயிரிழப்புக்குப் பின்னர், தமது மகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக தாமரைக் கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவியின் தந்தை, வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்பட்ட பாடசாலை மாணவி , தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கொழும்பு - கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், அவரது பையில் இருந்து பாடசாலை சீருடை, புத்தகம் மற்றும் தொலைபேசி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதுடன், மற்றொரு இடத்தில் அவரது காலணிகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளார்.
அத்துடன், தாமரை கோபுரத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அவர் தவறான முடிவெடுப்பதற்கு வந்ததை உறுதி செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.