433 காட்டு யானைகள் உயிரிழப்பு!
இலங்கையில், 2022ஆம் ஆண்டில் மாத்திரம், 433 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக தேசிய செயல் திட்டம் சுற்றாடல் இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்திப பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவில் தெரியவந்துள்ளது.
நாட்டின் 62 சதவீதமான நிலப்பரப்பில் காட்டு யானைகள் வாழ்ந்து வருவதாக வனவிலங்கு விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில், நெற் பயிர்ச்செய்கையை பாதுகாப்பதற்காக, சமூக மட்டத்திலான தற்காலிக மின் வேலிகள் அமைக்க வேண்டும் என அந்த குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், யானைகளை தடுப்பதற்காக வேலைகளை அமைப்பதற்கு முன்னர், யானைகளின் நடத்தை மற்றும் மனித நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தேசிய செயல் திட்டம் சுற்றாடல் இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்திப பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.