தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் - மாவீரர் நாளில் உறுதிபூணல்!
தமிழர்கள் இலங்கை நாட்டில் சுயநிர்ணய உரிமையுடன் ஏனைய இனங்கள் போன்று சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக தன்னுயிர்களை தியாகம் செய்த விடுதலை வீரர்களை நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் கொட்டும் மழையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நரடைபெற்றன.
மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
பெருமளவான மாவீரர்களின் உறவினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.
சரியாக 6.10மணியளவில் பிரதான சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் இசை இசைக்கப்பட்டதுடன் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இன்றைய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுதவிர வடக்கில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பெருமளமான உறவுகள் கலந்து கொண்டு தீபச் சுடர் ஏற்றப்பட்டது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் தன்னுயிர்களை தியாகம் செய்த விடுதலை வீரர்களை நினைவுகூரும் விதமாக தீபச் சுடர் ஏற்றப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.