மதுவரி அனுமதிப் பத்திர கட்டணம் அதிகரிப்பு!
ஜனவரி 12ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் வருடாந்த மதுவரி அனுமதிப் பத்திர கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பனை சாராயம் தவிர்ந்த மதுபான உற்பத்தி நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரக் கட்டணம் 2 கோடியே 50 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக குறித்த கட்டணம் 10 லட்சம் ரூபாவாக காணப்பட்டது.
250,000 ரூபாவாக காணப்பட்ட பனை மதுபான உற்பத்தி நிலைய உரிமக் கட்டணம் 50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.