தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கான காலக்கெடு 29ஆம் திகதி நிறைவு
*தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கான காலக்கெடு 29ஆம் திகதி நிறைவு!*
இந்திய உயர்ஸ்தானிகரகம் வழங்கும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் மேலதிகக் கல்வியைத் தொடர்வதற்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கான காலக்கெடு ஏப்ரல் 29ஆம் திகதி நிறைவு பெறுகிறது.
இந்திய அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் இளங்கலைப் படிப்புகள் மற்றும் இலங்கையில் உள்ள அரச தொழில்நுட்பக் கல்விக்கான புலமைப்பரிசில்களை வழங்கி வருகிறது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் குறைந்தபட்சம் 6 சிறப்பு சித்திகள் அல்லது கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் சித்தியடைந்த மற்றும் 25 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர்.
விண்ணப்பப் படிவங்களை www.hcicolombo.gov.in என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
அல்லது இலக்கம் 36-38, காலி வீதி, கொழும்பு 3 அல்லது 47, மஹாமாயா மாவத்தை கண்டி என்ற முகவரியில் உள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களுடன் பிறப்புச் சான்றிதழ், கல்விப் பெறுபேறுகள், பெற்றோரின் அண்மைய வேதனச் சீட்டு மற்றும் பெற்றோரின் தொழில் தொடர்பான பெருந்தோட்ட முகாமையாளரின் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களையும் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை ஏப்ரல் 29ஆம் திகதிக்கு முன்னர் கௌரவச் செயலர், CEWET, இந்திய உயர்ஸ்தானிகரகம், அஞ்சல் பெட்டி இலக்கம் 882, கொழும்பு 3 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.