பொலன்னறுவையில் இருந்து அடுத்த சபாநாயகர்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய சபாநாயகராக பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நாட்களில் புதிய சபாநாயகராக பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, தேசிய சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பட்டி ஆகியோர் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்ட போதிலும் அவை தவறானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட விருப்பு பட்டியலில் இரண்டாம் இடத்தை பெற்ற விக்கிரமரத்ன எம்.பி சபாநாயகராக நியமிக்கப்படவுள்ளதோடு அவர் பெற்ற விருப்பு வாக்குகள் 51,391 ஆகும்.
அசோக ரன்வலவின் இராஜினாமாவால் சபாநாயகர் பதவி வெற்றிடமானதுடன் அசோக ரன்வலவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரொஹந்திரவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
கடந்த 13ஆம் திகதி 10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராகப் பதவியேற்ற அசோக ரன்வல, தனது பதவியை இராஜினாமா செய்வதாக எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார்.