மட்டக்களப்பில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் - காரைத்தீவில் மாணவனின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு நாவற்குடா கொம்மாதுறை போன்ற பிரதேசங்களில் தற்போதய சீரற்ற காலநிலை காரணமாக வீடு காணிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ள காட்சிகளை இங்கு பிரசுரித்துள்ளோம்.

தற்போதய காலநிலையால் மட்டக்களப்பு கொழும்புக்கு இணையான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

சில பஸ்கள் வாகரை வழியாக கந்தளாய் சென்று அங்கிருந்து கொழும்பு நோக்கி செல்கிறது. 

இதனால் அவசர தேவை கருதி கொழும்பு நோக்கி பயணிப்பவர்கள் மிகுந்த அசௌகரியங்களுக்கு ஆளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அம்பாறை - காரைத்தீவில் நேற்று (26) உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போன சம்பவத்தில் மாணவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (26) மாலை நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற உழவு இயந்திரம், காரைத்தீவு பேருந்து நிலையம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உழவு இயந்திரத்தில் 11 மாணவர்கள், சாரதி மற்றும் உதவியாளர் பயணம் செய்தனர், 

இதன்போது, வௌ்ளத்தில் சிக்கிய 5 மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர்.

அதன்படி, காணாமல் போன மாணவர்களில் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.