தமிழ் பேசும் மக்களுக்காக விசேட அவசர இலக்கம்!
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை குறித்து தகவல் தெரிவிக்க அல்லது உதவி பெற தமிழ் பேசும் மக்களுக்காக பிரத்தியேகமான 107 என்ற தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
குறித்த இலக்கத்தின் ஊடாக சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அவசரகால சூழ்நிலைகள், இடப்பெயர்வுகள் மற்றும் உதவிகள் தொடர்பில் அறிவிக்குமாறு பொலிஸார் தமிழ் பேசும் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த 107 என்ற தமிழ் அவசர சேவை இலக்கம் கடந்த மார்ச் 16 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கை பொலிஸாரினால் வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அறிமுகம் செய்யப்பட்டது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த தகவலை வௌியிட்டுள்ளார்.
பொதுவாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கங்கள் பிரதான மூன்று மொழிகளிலும் செயற்பட்டு வரும் நிலையில், தமிழ் பேசும் மக்களுக்காக 107 என்ற பிரத்தியேக இலக்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரிறான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரினால் குறித்த இலக்கம் பாவனைக்கு கொண்டு வரப்பட்டது.