மத்திய வங்கி அதிகாரிகளை கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைக்க தீர்மானம்!
இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை அடுத்த கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாரிய கருத்தாடலை ஏற்படுத்திய மத்திய வங்கியின் ஊழியர்களுக்கான வேதன அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 5ஆம் திகதி முற்பகல் 10.30 அளவில் கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இன்று முற்பகல் இடம்பெற்ற நாடாளுமன்ற செயற்பாடுகள் பற்றிய கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.