நீரேந்தும் பகுதிகளில் நீர் தேக்கங்களின் மட்டம் குறைந்தது!
மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவுவதால் நீரேந்தும் பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளவை விட 20 கனஅடி குறைந்து உள்ளது.
அதேபோல காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 10 அடி குறைந்து உள்ளது.
மேல் கொத்மலை கென்யோன், லக்சபான, பொல்பிட்டிய, கலுகல, விமலசுரேந்திர, நவலக்சபான, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.
தொடர்ந்து இந்தப்பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவுவதால் சகல நீர் தேக்கங்களின் நீர்மட்டமும் மேலும் குறையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்காரணமாக பெருந்தோட்ட பகுதிகளில் சுத்தமான குடிநீருக்கு பாரிய அளவில் தட்டுப்பாடு நிலவுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.