வாக்காளர்கள் குறித்து வெளியான கணக்கெடுப்பு!
நாட்டில் உள்ள 400,000 இற்கும் அதிகமான வாக்காளர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்போம் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை என அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவினர் வீடு வீடாகச் சென்று சில ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வுகளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களில் அடுத்த தேர்தலில் பலரும் தங்களுக்கு விருப்பமான வேட்பாளரை தேர்வு செய்வார்கள் என தெரியவந்துள்ளது.
நாட்டில் நிலவும் அரசியல் நிலவரங்கள், வேட்பாளர்களின் புகழ், நாட்டைக் கட்டியெழுப்பும் திறன் போன்றவற்றை ஆய்வு செய்த பிறகே வேட்பாளரை தேர்வு செய்வோம் என 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் கருத்துக் கணிப்பில் ஈடுபட்டதாகத் தெரிய வந்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் முதல் வாக்களிக்க உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிட்டத்தட்ட இருபது இலட்சம் இளைஞர்கள் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறமாட்டார்கள் என்றும் தெரிய வந்துள்ளது