4×400 கலப்பு ஓட்டத்தில் அமெரிக்கா புதிய உலக சாதனை!

4×400 கலப்பு ஓட்டத்தில் அமெரிக்கா புதிய உலக சாதனை!

பரிஸ் ஒலிம்பிக்கில் தகுதிச் சுற்றின் முதல் சுற்றில் 4×400 கலப்பு ஓட்டத்தில்  அமெரிக்கா புதிய  உலக சாதனையை படைத்துள்ளது.

பந்தைய தூரத்தை மூன்று நிமிடங்கள் 7.41 வினாடிகளில் கடந்த அமெரிக்கா இந்த சாதனையை  ஒலிம்பிக் அரங்கில் பதித்துள்ளது.

வெர்னான் நார்வூட், ஷமியர் லிட்டில், பிரைஸ் டெட்மன் மற்றும் கெய்லின் பிரவுன் அடங்கிய அமெரிக்க அணியே இந்த சாதனையை படைத்துள்ளது.

2023ஆம் ஆண்டு புடாபெஸ்டில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் அமெரிக்கா பந்தைய தூரத்தை 3:08.80 கடந்த நேர இடைவெளியே உலக சாதனையாக காணப்பட்டது.

எனினும் தனது சொந்த சாதனையை மீண்டும் அமெரிக்கா முறியடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் இறுதிப்போட்டியில் அமெரிக்கா பெல்ஜியம் மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளுடன் போட்டியிடவுள்ளது.