சிக்கலில் டில்ஷான் மதுஷங்க
பங்களாதேஷ் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான டில்ஷான் மதுஷங்க பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இரு அணிகளும் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக டில்ஷான் மதுஷங்க சில வாரங்களுக்கு விளையாடமாட்டார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டில்ஷான் மதுஷங்க ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் பங்கேற்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.