இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளா்கள் இருவா் இராஜினாமா!
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வுட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது, தனிப்பட்ட காரணங்களை மேற்கோள்காட்டி குறித்த இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் அவர் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து மஹேல ஜயவர்தனவும் திடீரென விலகியுள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.