2023 ஐ.சி.சி உலக கிண்ணக் கிரிக்கட் தொடருக்கான பரிசுத் தொகைகள் அறிவிப்பு!

2023 ஐ.சி.சி உலக கிண்ணக் கிரிக்கட் தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

2023 ஐ.சி.சி உலக கிண்ணக் கிரிக்கட் தொடருக்கான பரிசுத் தொகைகள் அறிவிப்பு!

மொத்த பரிசுத் தொகையாக 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளன.

இறுதிப் போட்டியில் வெற்றிப் பெறும் முதல் அணி 4 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும்.

அத்துடன், இறுதிப் போட்டியில் தோல்வியடையும் அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலக கிண்ணக் கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி அஹமதாபாத்தில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நேற்றைய முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 5 விக்கட்களால் வெற்றிப் பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய அவுஸ்ரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றது.

277 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி 48.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்களை இழந்து 281 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை பதிவு செய்தது.