உலகக் கிண்ண இறுதிப் போட்டி: விராட் கோலி எட்டிய புதிய மைல்கல்!

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று(19) இடம்பெறுகின்றது.

உலகக் கிண்ண இறுதிப் போட்டி: விராட் கோலி எட்டிய புதிய மைல்கல்!

அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் குறித்த போட்டியில் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

 இதற்கமைய, இந்திய அணி முதலில் துடுப்பாடி வருகின்றது.

களத்தில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி 40 ஓட்டங்களை பெற்றுள்ளார். 

இதன்மூலம், 2023ஆம் ஆண்டில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கோலி 1,500 ஓட்டங்களை கடந்துள்ளார்.