டெஸ்ட் போட்டியில் வென்றால், இலங்கை வீரர்களுக்கு 15,000 டொலர் (45 இலட்ச ரூபாய்) வழங்கப்படும்!
டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புத்துயிர் வழங்கும் நோக்கில், இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஒரு சிறந்த நடவடிக்கையாக, டெஸ்ட் போட்டி விளையாடும் வீரர்களுக்கான போட்டிக் கட்டணத்தில் கணிசமான அதிகரிப்பை அறிவித்துள்ளது.
போட்டிகளில் வெற்றி பெறும் போது இருந்த போட்டிக் கட்டணம் US$7,500ல் இருந்து US$15,000 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
தற்போது கிரிக்கட் வீரர்கள் பெறும் இழப்பீட்டை இல்லாமல் செய்து 100 சதவீதம் அதிகரிப்பு இடம்பெறும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இடம்பெறும் இந்த அதிகரிப்பில் வெற்றி தோல்வி இன்றி முடியும் போட்டியின் கட்டணத்தை US$12,500 ஆகவும், தோல்விகளுக்கான போட்டிக் கட்டணத்தை US$10,000 ஆகவும் உயர்த்தியுள்ளது.
T20 கிரிக்கெட்டின் விரைவான எழுச்சியை அடுத்து, அதன் பிரபலத்திற்கு பெருகிவரும் சவால்களை எதிர்கொண்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஒரு முக்கியமான கட்டத்தில் இந்த நகர்வுகள் வந்துள்ளன.
T20 போன்ற குறுகிய கிரிக்கட் வடிவத்தின் கவர்ச்சி, அதன் வேகமான அதிரடி மற்றும் அதிக ஓட்ட இலக்கு சந்திப்புகள், பல ஆண்டுகளாக விளையாடப்பட்டு வரும் டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான மோகத்தை மங்க செய்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா, "டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக எண்ணிக்கையிலான வீரர்களை ஊக்குவிக்க நாங்கள் விரும்புகிறோம்.
"டெஸ்ட் போட்டிகளுக்கான போட்டிக் கட்டணத்தை உயர்த்துவதற்கான எங்கள் முடிவு, டெஸ்ட் கிரிக்கட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் எங்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் என தெரிவித்தார்.