நரம்பியல் கோளாறுகளால் அதிகமானோர் பாதிப்பு!
உலகளவில் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன.
உலக சுகாதார ஸ்தாபனம் நடத்திய ஆய்வில் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
அத்துடன், அவர்களில் 80 சதவீதமானோர் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.