இலங்கை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தீர்மானத்திற்கு அங்கீகாரம்!
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை தடை செய்வதற்கு நவம்பர் மாதம் 10ம் திகதி எட்டப்பட்ட தீர்மானத்திற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றுக் குழு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவின் அஹமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை கிரிக்கெட் அணி பங்குப்பற்றும் போட்டிகளுக்கு அதனூடாக பாதிப்பு ஏற்படாது என நிறைவேற்றுக்குழு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படும் நிதியை, கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அஹமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷமி சில்வா கலந்துகொண்டிருந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.