இங்கிலாந்தை இலகுவாக வீழ்த்திய இலங்கை கிரிக்கட் அணி!

2023ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி நிறைவடைந்துள்ளது.

இங்கிலாந்தை இலகுவாக வீழ்த்திய இலங்கை கிரிக்கட் அணி!

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 33.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

உலக கிண்ண கிரிக்கட் தொடர் வரலாற்றில் இலங்கை அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி பெற்றுக் கொண்ட குறைவான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டொக்ஸ் 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். 

பந்துவீச்சில் இலங்கை அணியின் லஹிரு குமார 3 விக்கட்டுக்களையும் கசுன் ராஜித்த மற்றும் அஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்தநிலையில் 157 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரையில் 18 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.