சீன கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசியன் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் கிரிக்கட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான கிரிக்கட் போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி முதல் அக்டோபர் மாதம் 8ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், ஆசியன் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் ஆடவர் அணியின் தலைவராக அறிமுக வீரரான காசிம் அக்ரம் செயல்படவுள்ளார்.

சகல துறை ஆட்டக்காரரான 40 இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் கடந்த ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான பாகிஸ்தான் அணியின் தலைவராகவும் செயற்பட்டார்.

மற்றுமொரு அறிமுக வீரரான ஒமைர் பின் யூசுப் துணை தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எனினும் ஆசிப் அலி, ஹைதர் அலி உள்ளிட்ட சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் கொண்ட வீரர்களும் ஆசியன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் கிரிக்கட் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.