காற்பந்து சம்மேளனத்தின் நிர்வாக பணிகளுக்கு மூவரடங்கிய குழு நியமனம்!

காற்பந்து சம்மேளனத்தின் தேர்தலை நடத்துவதற்கும், அதன் அத்தியாவசிய நிர்வாக பணிகளை முன்னெடுப்பதற்கும், விளையாட்டுத்துறை அமைச்சரினால் மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது 

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் கையொப்பத்துடன், இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

1973ம் ஆண்டின் 25ம் இலக்க 32ம், 33ம் மற்றும் 41ம் பிரிவுகளில் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஜே.சி தேசப்பிரிய தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழுவில் என்.கே கப்புருபண்டார, கே.ஏ.ஆர்.சி கஹந்தவல ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.