அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஃபவாத்தின் குழந்தை உயிரிழப்பு!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஃபவாத் அகமதுவின் குழந்தை உயிரிழந்தது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஃபவாத்தின் குழந்தை உயிரிழப்பு!

குறித்த குழந்தை மெல்பர்னில் உள்ள ரோயல் குழந்தைகள் மருத்துவமனையில் பல மாதங்களாக சிகிச்சைப்பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ​​பல்வேறுபட்ட உடல்நலக் கோளாறு காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு தமது இரங்கலை தெரிவிக்கும் வகையில், நேற்றைய (25) நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது அவுஸ்திரேலிய அணி வீரர்கள் கையில் கறுப்பு பட்டி அணிந்து விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.