அவுஸ்திரேலியர்கள் கண்ட சந்திரயான்-3ன் அழகு: வைரலாகும் புகைப்படம் & காணொளி
அவுஸ்திரேலியாவில் இரவு நேர வானில் தெரிந்த சந்திரயான்-3 விண்கலத்தின் வசீகரிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை வானியல் ஆர்வலரான டிலான் ஓடோனல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வானியல் ஆர்வலர் டிலான் ஓடோனல் தனது ட்விட்டர் பதிவில், சந்திரயான்-3 இன் நேரலை வெளியீட்டை யூ-டியூப்பில் பார்த்ததாகவும், அதன்பிறகு சுமார் 30 நிமிடங்கள் கழித்து, அது தனது வீட்டைக் கடந்து சென்றபோது, இரவு நேரத்தில் அதன் புகைப்படத்தை எடுக்க முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், மின்னும் நட்சத்திரங்களின் பின்னணியில் நீல நிறத்தில் சந்திரயான்-3 விண்கலம் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.