தென்லெபனானை இலக்குவைத்து எறிகணை தாக்குதல்!

லெபனானின் தென்பகுதியில் இடம்பெற்ற எறிகணை தாக்குதலில் ஐநாவின் மூன்று கண்காணிப்பாளர்களும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக ஐநாவின் அமைதிக்காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் ஆளில்லா விமானதாக்குதலே இதற்கு காரணம் என லெபானான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.எனினும் இஸ்ரேல் இதனை நிராகரித்துள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர் தாக்குதல் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன என ஐநா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் இருந்து தென்லெபானனை பிரிக்கும் ஐநாவால் வரையறுக்கப்பட்ட நீலக்கோடு வழியாக ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு அருகில் எறிகணை வீழ்ந்து வெடித்தது என ஐநா தெரிவித்துள்ளது.

அமைதிப்படையினரை இலக்குவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐநா தெரிவித்துள்ளது.

லெபானின் உட்பகுதிகள் தாக்குதலிற்காக தெரிவுசெய்யப்படுகின்றன இதன் காரணமாக பெரும்மோதல் வெடிக்கலாம் என ஐநா பேச்சாளர் தெரிவித்துள்ளார்.