கனடா இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சார்லஸ்! பிரதமர் ட்ரூடோ கூறிய வாழ்த்து
கனடாவில் நடந்த கூட்டாச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சார்லஸ் சௌசாவிற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல்
கடந்த மே மாதம், ஐக்கிய நாடுகள் சபையில் வேலை செய்வதற்காக Liberal கட்சியின் MP ஸ்வென் ஸ்பெங்மேன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் ரோன் சின்சர் மற்றும் லிபரல் கட்சியின் வேட்பாளர் சார்லஸ் சௌசாவுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
@THE CANADIAN PRESS/Christopher Katsarov
சார்லஸ் சௌசா வெற்றி
இந்த நிலையில், ரோன் சின்சரை விட அதிக வாக்குகள் பெற்று சௌசா வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அவரது பதிவில், 'இது அதிகாரப்பூர்வமானது: இன்றிரவு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர் சார்லஸ் சௌசா. Mississauga - Lakeshore மக்களுக்காக முடிவுகளை வழங்க, அவருடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன் - அவர் தயாராக இருக்கிறார் என்பதை நான் அறிவேன். மேலும் அவர் பணிக்கு தயாராக இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துக்கள் சார்லஸ்' என தெரிவித்துள்ளார்.