விஜயகாந்த் கடந்து வந்த பாதை - சிறப்புத் தொகுப்பு!
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும் தென்னிந்திய பிரபல நடிகருமான விஜயகாந்த் இன்று தமது 71 ஆவது வயதில் காலமானார்.
சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், அவருக்கு ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து, அவர் இன்று காலை காலமானதாக குறித்த தனியார் மருத்துவமனையை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பினார்.
எனினும், அவருக்கு மீண்டும் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக, நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் காலமானார்.
1952ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் பிறந்த அவர், 10ஆம் தரத்துடன் தமது பாடசாலை கல்வியை இடைநிறுத்தி, பின்னர் திரைத்துறைக்குள் பிரவேசித்தார்.
1979 இல் இனிக்கும் இளமை எனும் திரைப்படத்தில் தமிழ் சினிமாவுக்குள் பிரவேசித்த விஜயகாந்த், அகல்;விளக்கு திரைப்படத்தின் ஊடாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.
அம்மன் கோயில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், சேதுபதி ஐ.பி.எஸ், சொர்க்கத்தங்கம், வானத்தைப் போல உள்ளிட்ட பல திரைப்படங்களில் மக்கள் மனதை கொள்ளையிட்டுள்ளார்.
150க்கு மேற்பட்ட திரைப்படங்களில் அவர் விஜயகாந்த் நடித்துள்ளார்.
பின்னர், விஜயகாந்த்; தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து 2005ஆம் ஆண்டில் அரசியலுக்குள் பிரவேசித்ததுடன், 2006ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்றார்.
2011 ஆண்டில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடனான கூட்டணியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.
இந்தநிலையில், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டுவரை தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் விஜயகாந்த் செயற்பட்டிருந்தார்.
அவர் திரைப்படங்களில் பேசிய அரசியல் வசனங்கள் இன்னும் நிஜ வாழ்வில் உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.
மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடல் வைத்தியசாலையில் இருந்து அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வசன உச்சரிப்பில் தனக்கென ஒரு தனி பாணியையும், சண்டை காட்சிகளில் சுழன்று பின்னால் உதைப்பதையும் இவரை தவிர எவரும் செய்ய மாட்டார்கள்!
பிறப்பில் தெலுங்கன் ஆனாலும், இறக்கும் வரை தமிழனாய் வாழ்ந்த சொக்கத்தங்கம்! பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களெல்லாம் பணத்திற்காக பல வேற்று மொழிகளில் நடித்தனர்!
தமிழில் மட்டும் நடித்த தமிழச்செல்வன்! அரசியலுக்கு வரவே அஞ்சிய காலத்தில் அன்றைய ஜெயா அரசையே எதிர்த்த வல்லரசு! ஈழ போராட்டத்தையும், அதன் தலைமையையும் நேசித்த கப்டன் பிராபகரன்!
தென்னிந்நிய சினிமா சங்கத்தின் கடனை அடைத்த தென்னவன்! அனைவரையும் வாஞ்சையுடன் அரவணைக்கும் வாஞ்சிநாதன்! நோய்த்தாக்கத்திற்கு ஆளாகாமல் இருந்திருந்தால், ஒரு பேர்ரசாக மாறியிருப்பார்!
துணை நடிகர்கள் பலர் பட வாய்ப்புகள் இல்லாமல் கஸ்டப்பட்ட வேளைகளில், அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவென பல படங்களை தயாரித்து நடித்த எங்கள் அண்ணா! இன்று மறைந்தாலும் அனைவர் மனதிலும் வாழும் சிம்மாசனம்!!
நன்றி கெட்ட சினிமா கார்ர்கள் மத்தியில் எப்போதும் ஏழைகளுக்காக உழைத்த ஒரு ஏழை ஜாதி அண்ணன் விஜயகாந்த்! அவரின் ஆன்மா அமைதி பெறட்டும்.
நன்றி : டானியல்
இணையத்தில் பதிவிடப்பட்ட அன்னாரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக >>>,
மதுரையில் அரிசிஆலை நடத்தி வந்த குடும்பத்தில் இருந்து சினிமா ஆர்வத்தில் சென்னைக்கு வந்து விட்டார் விஜயராஜு. வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் சாப்பாட்டுக்கே கஷ்டம்... ஊரில் இருந்தும் எந்த உதவியும் பெற மனமில்லை.
இரண்டொரு படங்கள் நடித்த பின்னும் கூட அடுத்த வாய்ப்புகள் வரவில்லை. மீண்டும் கஷ்டம்....
ஒரு வழியாக ரஜினி கமலுக்கு இணையாக எந்த சினிமா பேக்ரவுண்டும் இல்லாமல் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்தார் கேப்டன்.
அப்போதெல்லாம் நான்கு வகையாக ஷுட்டிங் ஸ்பாட்டில் உணவுகள் தரம் பிரித்து வழங்கப்படும். ஹீரோ, ஹீரோயின், டைரக்டர், கேமரா மேன் போன்றோருக்கு ஒரு வகை,
அசிஸ்டன்ட் கேட்டகிரிக்கு தனி, லைட்மேன் போன்றோருக்கு தனி, கடைசியா ட்ரைவர், மற்ற சிப்பந்தி வேலை பார்ப்பவர்களுக்கு தனி... இதுதான் காலங்காலமாக இருந்த வழக்கம்.
ஆனால் விஜயகாந்த் அவர்கள் படப்பிடிப்பில் மட்டும் அனைவருக்கும் ஒரே வகையான சாப்பாடு, விஜயகாந்த் மட்டன் சாப்பிட்டால் கடைசி பணியாள் வரை மட்டன் சாப்பாடு, அவருக்கு மீன் பொறித்தால் கடைசி பணியாள் வரை மீன் கொடுக்க வேண்டும்.
சாப்பிடுறதுல என்னைய்யா ஆள் பாத்து கொடுக்குறிங்கன்னு சொல்லி அத்தனை பேருக்கும் ஒரே சாப்பாடு ன்னு கொண்டு வந்தது விஜயகாந்த்...
தயாரிப்பாளர் தலைல அந்த செலவை கட்டல.... என் சம்பளத்துல இருந்து அத பண்ணுங்க... மிச்சத்தை மட்டும் கொடுங்கனு சொல்லிட்டு போயிடுவார்...
கோடம்பாக்கத்துல அவரோட அலுவலகத்துல அணையா விளக்கு மாதிரி அடுப்பு எரிஞ்சுட்டே இருக்கும்... பசின்னு வர்ற அத்தனை பேரும் சாப்டுட்டு போயிட்டு இருப்பாங்க.
சிலர் லாம் மெஸ் ன்னு நினைச்சு உள்ள வந்துட்டு சாப்டுட்டு ரூபாய் கொடுக்க போனப்போ இது விஜயகாந்த் சார் ஆஃபீஸ்-ங்க ன்னு சொல்லி அனுப்பி வைப்பாங்களாம்.
அந்த அளவுக்கு பிறர் பசியை போக்கிய வள்ளல்.
காலாகாலமா கடன்ல மட்டும் இருக்குனு கணக்கு காட்டுன நடிகர் சங்க கடனை யெல்லாம் அடைச்சு அத நல்ல நிலைக்கு கொண்டு வந்த சிறந்த நிர்வாகி .
எதிர்கட்சி தலைவர் அளவுக்கு வெகு விரைவில் வந்த அரசியல்வாதி... அவருக்கு சினிமால நடிக்க வந்த அளவுக்கு நிஜத்துல நடிக்க வரல.
அவரோட இயல்பை எல்லா இடத்துலயும் வெளிப்படுத்தினார். அது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
சிரிச்சாலும் வெள்ளந்தியான சிரிப்பு... ஒருத்தரோட கஷ்டம்னாலும் அத பாத்து கண்ணீர் விட்டு அழுற மனசு... அப்படிப்பட்ட ஒரு மனுஷன்.
அரசியல்வாதிகளில் வள்ளல் ன்னு MGR யை சொல்லுவாங்க... நான் அவரை பாத்ததில்ல... ஆனா வாழும் வள்ளலா பார்த்தது விஜயகாந்த் அவர்களைத்தான்...
பல லட்சக்கணக்கான பேரின் பசியை போக்குன, கண்ணீரைத்துடைத்த விஜயகாந்த் மதுரை மாநாட்டுல சொல்றார்.
"என் சொந்த காசுலதான் கட்சி துவங்குகிறேன். காசு வரும் போகும். இது இல்லாமலே போனாலும் பரவால்ல... மனுசன் என்னய்யா அதிகபட்சமா தேட போறான் சாப்பாடுதான...
இத்தன லச்சம் பேரு இங்க வந்துருக்கிங்க, உங்க ஒவ்வொருத்தர் வீட்லயும் ஒரு வேளை சோறு வாங்கி சாப்பிடாலும் என் ஆயுள் பத்தாது. அவ்வளவு அன்பை தேடி வச்சுருக்கேன்" ன்னு சொன்னார்.
ஆழ்ந்த இரங்கல் கேப்டன்... உங்கள் நல்ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும்...????????????????