அமரர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்!

மறைந்த பிரபல நடிகர் விஜயகாந்துக்கு நடிகர் விஜய் இன்று மாலை அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இருந்து திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகாந்தின் பூதவுடலுக்கு முதலில் நடிகர் கவுண்டமணி அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழிசை சவுந்தரராஜன், வி.கே. சசிகலா, சென்னை மாநகராட்சி முன்னாள் நகராதிபதி சைதை துரைசாமி, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, நடிகர்கள் மன்சூர் அலிகான், பிரபு, சூரி, ஆனந்த்ராஜ், இயக்குனர்கள் டி.ராஜேந்தர், விக்ரமன், ஏ.ஆர்.முருகதாஸ், பேரரசு, கவிஞர் வைரமுத்து ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இந்தநிலையிலேயே, நடிகர் விஜய் விஜயகாந்தின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தளபதி - 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளில் இருந்த விஜய், விஜயகாந்தின் மறைவு செய்தி அறிந்து வந்துள்ளார்.

விஜயகாந்த் உடல் வைத்திருக்கும் கண்ணாடி பேழை மீது கை வைத்து கண்ணீர் விட்ட நடிகர் விஜய், பிரேமலதாவின் கரங்களை பிடித்து ஆறுதல் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மதியம் 12 மணி வரை கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://youtube.com/shorts/T4ihZSiE1eg?si=jzWdUKzTaRCiPZ6b