மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அஜித்
மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித் நலமுடன் வீடு திரும்பியுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது, அவரது காதுக்கு கீழே நரம்பு வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டறியப்பட்ட நிலையில் அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் சிகிச்சை நிறைவடைந்த நிலையில் நடிகர் அஜித் இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளார்.
அத்துடன், அடுத்தவாரம் இடம்பெறவுள்ள விடாமுயற்சி படப்பிடிப்பிற்கு அவர் செல்வார் என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.