தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வெளியிட்ட புதிய அறிக்கை!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வெளியிட்ட புதிய  அறிக்கை!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயரை அறிவித்தார்.

இதன்படி 2026 ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே தமது இலக்கு என்று நடிகர் விஜய் குறிப்பிட்டிருந்தார்.

இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தமது வாழ்த்துகளை தெரிவித்து வந்த நிலையில் நடிகர் விஜய் தனது x பக்கத்தின் ஊடாக அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

திரைத்துறை நண்பர்கள், பாசத்திற்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் அனைவரும் நன்றி எனவும், எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என அவர் தனது x பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு தனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளதாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.