சாரதிகளுக்கு இலவச தேநீர் - அதிரடி திட்டம் அமுல்... எங்கு தெரியுமா?

நேற்று முதல் அமலுக்கு வரும் இத்திட்டம் ஜனவரி 7ஆம் திகதி வரை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. 

சாரதிகளுக்கு இலவச தேநீர் - அதிரடி திட்டம் அமுல்... எங்கு தெரியுமா?

ஒடிசாவில் இரவு நேரங்களில் அதிக அளவிலான வீதி விபத்துக்கள் நடைபெறுகின்றன. நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதற்கிடையே, வீதி பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புதிய திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. 

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் நெடுஞ்சாலை விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக இரவு நேர சாரதிகளுக்கு இலவச தேநீர் வழங்கும் திட்டத்தை அம்மாநில போக்குவரத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

நேற்று முதல் அமலுக்கு வரும் இத்திட்டம் ஜனவரி 7ஆம் திகதி வரை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. 

அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் சாரதிகளுக்கும் இலவச தேநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் சாரதிகளுக்கு தூக்கம் அல்லது சோர்வு அதிகரிக்கையில் இலவசமாக தேநீர் வழங்கப்பட உள்ளது.