ஹிந்து ஆலயம் இடிந்து வீழ்ந்து 9 பேர் உயிரிழப்பு - மொத்த உயிரிழப்பு 24 பேர்!
இந்திய வட மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பழமையான ஹிந்து ஆலயம் இடிந்து வீழ்ந்தமையால் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்திய வட மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பழமையான ஹிந்து ஆலயம் இடிந்து வீழ்ந்தமையால் 9 பேர் உயிரிழந்தனர்.
இதுதவிர 25 பேர் வரை இடிபாடுகளுக்கு இடையே சிக்குண்டிருக்கலாம் என மாநில தலைமை அமைச்சர் சுக்விண்டர் சிங்ஹா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கடும் மழையுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதிக அளவில் சுற்றுலா பயணிகள் விஜயம் செய்யும் சிம்லா நகரத்தில் நிலசரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
அசாதாரண காலநிலை காரணமாக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தினுள் 21 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தலைமை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
காலநிலை சீர்கேடு தொடர்வதனால் மீட்பு பணிகள் மெதுவாகவே இடம்பெறுகின்றன.
மாநிலத்தில் உள்ள வேறு நான்கு ஹிந்து ஆலயங்கள் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அசாதாரண காலநிலை காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் ஹிமாச்சல் பிரதேசத்தில் 24 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.