இலங்கைக்கு கடத்துவதற்கு தயார்படுத்தப்பட்டிருந்த 108 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் மீட்பு!

இலங்கைக்கு கடத்துவதற்கு தயார்படுத்தப்பட்டிருந்த 108 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான போதைப் பொருளை அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியுள்ளனர்.
தமிழகத்தின் தனுஸ்கோடி கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த போதைப் பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது 99 கிலோகிராம் ஹஷிஸ் ரக போதைப் பொருள் மீட்கப்பட்டதாக இந்திய மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
111 சிறிய பைக்கட்டுக்களாக பொதி செய்யப்பட்ட 5 பொதிகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் இந்திய கடலோர காவல்படையினரும், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.