இந்த வருடத்தில் 3 சதவீதமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும்!
நாட்டின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து மீள் எழுச்சி பெற ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் , இந்த வருடத்தில் 2 சதவீதம் முதல் 3 சதவீதமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் கணித்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.