காலி வைத்தியசாலை கட்டுமான தள விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!
காலி - கராப்பிட்டி வைத்தியசாலைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமான தளத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், காயமடைந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த அனர்த்தம் கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்டிருந்தது.
இதன்போது, மண்ணுக்குள் சிக்குண்ட நான்கு பேர் மீட்கப்பட்டு கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் அன்றைய தினமே உயிரிழந்தார்.
இந்தநிலையில், கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.