சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கையில் நங்கூரமிட அனுமதி - அனைத்து வசதிகளும் தயார்!
ஷி யான் 6 என்ற சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கைத் துறைமுகங்களில் நங்கூரமிடுவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஷி யான் 6 என்ற சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கைத் துறைமுகங்களில் நங்கூரமிடுவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, இந்த மாதம் இலங்கைக்கு பிரவேசிப்பதற்கான அனுமதியை குறித்த சீனக் கப்பல் கோரியிருந்தது.
எவ்வாறாயினும், எதிர்வரும் நவம்பர் மாதத்தில் சீனக் கப்பலை நங்கூரமிடுவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஷி யான் 6 என்ற சீனக் கப்பல் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடும் போது, அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக இருக்க வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.