தொடரும் பொலிஸ் கைதுகள் - இன்றும் 900 பேர்வரை கைது!

இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலை வரை 900 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 649 பேரும், குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 229 பேரும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கைதானவர்களில் 6 பேர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதுடன், 4 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகத்தினால் தேடப்படும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 15 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்