துணை முதல்வர் பதவி உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!

துணை முதல்வர் பதவி உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அமைச்சர்களும் மேடைகளில் இந்த கருத்தை பேசி வந்தனர். 

நேற்று நடந்த திமுக முப்பெரும் விழாவில் ஸ்டாலின் மேடையில் இருக்கும் போதே முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், "உங்களுக்கும், மேடையில் இருக்கும் தலைவர்களுக்கும் ஏன் இன்னும் தயக்கம். உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டாமா?" எனப் பேசியிருந்தார். 

இந்நிலையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். துணை முதல்வர் அறிவிப்பு வர போகிறது என நினைத்த தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் குவிய தொடங்கினர். 

இந்நிலையில் துணை முதல்வர் பதவி தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் சந்தித்து கேள்வி எழுப்பிய போது, “என்னை துணை முதல்வராக்க வேண்டும் என தொண்டர்கள் சொல்வது அவர்களின் விருப்பம். துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் முடிவு செய்வார். எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாகத்தான் உள்ளோம் என பதிலளித்தார்.

யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் பெரியாரைத் தாண்டி, பெரியாரைத் தொடாமல் அரசியல் செய்ய முடியாது. விஜய் பெரியார் சிலைக்கு மாலையிட்டது நல்ல விஷயம். நண்பர் விஜய்க்கு என் வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்.