சிறப்பு அகதி முகாமில் தடுப்பில் உள்ள ஜெயகுமாருக்கு திடீர் சுகவீனம்!
இந்திய முன்னாள் பிரதமர் ரஜிவ் காந்தியின் கொலை வழக்கில் நீண்ட காலமாக சிறைவாசமிருந்து பின்னர், விடுதலையாகி, திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாருக்கு நேற்று திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த அகதிகள் முகாமுக்கு அருகில் உள்ள வைத்தியசாலையில், அவருக்கு, முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் திருச்சி அரச பொது மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் அகதிகள் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், திருச்சி அகதிகள் சிறப்பு முகாம் மற்றும் வைத்தியசாலை வளாகங்களில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
முன்னாள் இந்திய பிரதமர் ரஜிவ்காந்தியின் கொலை வழக்கில் இருந்து முருகன், சாந்தன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்டோர் விடுதலையான போதிலும், பயண ஆவணங்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் விசாரணைக்காக அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.